சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் வெளியேறும் ரசாயன நுரை


கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் சாயக்கழிவு நீர் கலப்பதால் வெளியேறும் நுரை. படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீருடன் சாயக் கழிவு கலந்து ஓடுவதால் வெண்மை நிறத்தில் ரசாயன நுரை வெளியேறி வருகிறது. மழை நீருடன் சாயக்கழிவு நீர் கலந்து ஓடுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “நொய்யல் ஆற்றில் சாயக் கழிவு நீர் கலந்து ஓடுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் ஆத்துப்பாலம், சுண்ணாம்பு காளவாய், பேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாயப் பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முறையாக சாயப் பட்டறைகளை கண்காணித்து சாயக் கழிவு நீரை வெளியேற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

x