உத்ரா
uthraperumal@gmail.com
எப்பையும் காலையில வேலைக்குக் கெளம்புறப்ப, “சாரதா கிளம்பறேன்”னு வீட்டம்மாக்கிட்ட சொல்லிட்டுக் கெளம்புவேன். அவளும் அரைத் தூக்கத்துல “ம்ம்...” என்று ஒரு முனகல் போட்டுவிட்டு, “பாழ்த்துப் போங்க...” என்று குடிகாரன் கணக்காய் குழறிவிட்டு முடித்துவிடுவாள்.
பார்த்தா பேராசிரியர் வேலைதான் பார்க்கணும்னு ஆசைப்பட்டது கடைசிவரைக்கும் எனக்கு அவஸ்தைதான். தினமும் தஞ்சாவூர் - சிதம்பரம் ரயில் பயணம். அதுக்காக அதிகாலை 4 மணிக்கே திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்கணும். ‘வேர் ஈஸ் மை டிரெய்ன்’ ஆப்ல பாத்தா, வெள்ளக்காரன் மாதிரி கரெக்டா 4.13 மணி போட்டிருக்கும். சொன்னபடி வந்துடுமேனுட்டு ஓடுனா, அதிகாலை 3.30 மணிக்கே தெரு நாய்ங்க எல்லாம் முழிச்சிக்கிட்டு தலைய நிமித்திப் பார்க்கும்.