முகம் காட்டும் மாரடைப்பு!


டாக்டர் கு. கணேசன்

மாரடைப்பின் முக்கியமான மூன்று முகங்களை இப்போது பார்க்கப்போகிறோம். அதற்கு முன், மாரடைப்பின் இரண்டு அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

மாரடைப்பு குறித்துப் பெரும்பாலான மக்களிடம் ஒரு தப்பான அபிப்பிராயம் இருக்கிறது. மாரடைப்பு திடீரென்று வந்து ஆளைச் ‘சாய்த்து’விடும் என்பதுதான் அது. தமிழ்த் திரைப்படங்களில் திடுக்கிடும் செய்தியைக் கேட்டதும் நடிகரோ நடிகையோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கிச் சாய்வதுபோல் காட்டப்படுவது இந்த அடிப்படையில்தான். அதில் நூற்றுக்கு நூறு உண்மையில்லை. நெஞ்சைப் பிடிக்கும் அளவுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னால் நெஞ்சு கனமாக இருப்பது, படபடப்பு உண்டாவது, உடல் அசதியாக இருப்பது போன்ற சாதுவான அறிகுறிகளை அது அலாரம்போல் அடித்துக் காண்பித்திருக்கும். ஆனால், அவற்றை ‘வாய்வு வலி’/‘அல்சர் வலி’/‘செரிமானம் சரியில்லை’/‘பணிக் களைப்பு’ என்று நாமே ‘பொய்க் காரணம் கண்டுபிடித்து’ அலட்சியப்படுத்தியிருப்போம். அதனால் மாரடைப்பை ஆரம்பத்தில் உணரத் தவறியிருப்போம். அதுதான் நம்மை ஆபத்தான மாரடைப்பில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.

நெஞ்சுவலியெல்லாம் மாரடைப்பா?

x