கரு.முத்து
muthu.k@kamadenu.in
‘அவன் சாகவில்லை! தலைவரைப் பார்க்கப் போயிருக்கிறான்!’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது பாடலூர் விஜய்க்கு நெருக்கமான திமுக பிரமுகர் ஒருவரின் முகநூல் பக்கம்!
பெரம்பலூர் அருகே, பாடாலூர் ஊட்டத்தூர் சாலையில் உள்ள விஜயின் வீடு உடன்பிறப்புகளின் ஆறுதல் வார்த்தைகளில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. தனது சகோதரனை இழந்த துக்கத்தில் பிரமை பிடித்தவர்கள் போல வீட்டில் ஆளுக்கொரு பக்கம் முடங்கிக் கிடக்கிறார்கள் அவரது இரு சகோதரிகளும். தாய் மணிமேகலையும், தந்தை தங்கராசுவும் இழப்பின் வலியால் பேச எதுவுமற்றுப் போயிருக்கிறார்கள்.