பொதுப்பணித் துறையை என்னிடம் கொடுங்கள்! - அமைச்சர் சி.வி.சண்முகம் அடுத்த அதிரடி!


குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in


சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக அதிமுகவில் ஒரு அணி திரள்கிறது. அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே பாயக்கூடும் எனக் கடந்த 20-01-19 இதழில் ‘கட்சிக்குள் இன்னொரு பிரளயம்? - எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டும் சி.வி. சண்முகம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன.

தனியாக நின்றாலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் இந்தத் தேர்தலில் மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க அதிமுக பெருந்தொகை  செலவிட வேண்டியிருக்கும். இதை மனதில் வைத்து இப்போது கட்சியின் உயர் மட்டத்
தில் இருப்பவர்கள்  நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் முதல்வரின் இல்லத்தில் நடந்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மற்றும்
தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முதலில், தேர்தலுக்கு நிதி திரட்டும் விஷயம் தொடர்பாக முதல்வர்தான் பேசியிருக்கிறார். “நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் என்னதான் வலுவானவர்களாக இருந்தாலும் கட்சியிலிருந்தும் கணிசமாக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அப்படி கணக்குப் போட்டதில் ஒரு தொகுதிக்கு 50 கோடி ரூபாயை இறக்க வேண்டி வரலாம். அதற்காக நம் வசம் ரெண்டாயிரம் கோடி இருந்தால்தான் தெம்பாக தேர்தல் களத்தில் நிற்க முடியும்” என்று சொன்ன முதல்வர்,
“யாரைப் பிடித்தாவது எப்படி முயன்றாவது என்னால் ஆயிரம் கோடி ரூபாயைப் புரட்டிவிட முடியும். எஞ்சிய ஆயிரம்
கோடிக்கான பொறுப்பை உங்களைப் போன்ற மற்ற அமைச்சர்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னாராம்.
அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், “வீட்டுவசதித் துறையைத் தவிர எனக்கிட்ட பெருசா வேறெந்த வசதியும் இப்ப இல்ல. இதவெச்சி எத்தனை கோடி புரட்டிக் குடுக்குறதுன்னு நீங்களே சொல்லுங்க...” என்றாராம். அவர் முடிப்பதற்கு முந்தியே சரட்டென முதல்வர் பக்கம் திரும்பிய சி.வி.சண்முகம். “யாரும் கஷ்டப்பட வேண்டாம்ங்க. உங்ககிட்ட இருக்க பொதுப்பணித் துறையை என்கிட்ட தர்றேன்னு சொல்லுங்க.

ஒரே மாசத்துல நீங்க கேக்குற தொகையைக் கொடுக்கிறேன். அதவிட்டுட்டு... ஒண்ணுமில்லாத ஒப்புக்குச் சப்பாணி துறைகளைக் குடுத்துட்டு பணம் குடுன்னா நாங்க எங்க போறது?”என்றாராம்.

தனது மாவட்டத்தைத் தாண்டியும் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வரும் சி.வி.சண்முகம், அதில் சிலருக்கு எம்பி, எம்எல்ஏ ஸீட்கள் வாங்கித் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறாராம். இதற்கு செக் வைக்கும் விதமாக அதிமுக தலைமையில் சிலர் காய்நகர்த்த ஆரம்பித்திருப்பதும் சண்முகத்தைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, பாமகவுடன் அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போடுவது சண்முகத்துக்கு அறவே பிடிக்கவில்லை என்கிறார்கள்.
|
முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்தும் ஓபிஎஸ்ஸிடம் அவர் குரலை உயர்த்தி கர்ஜித்ததாகவும் சொல்கிறார்கள். “தேமுதிகவையும் அதிமுக கூட்டணியில சேர்த்து கள்ளக்குறிச்சியை அவங்களுக்குக் குடுக்கப் போறதா பேசுறாங்க. அது கிடக்கட்டும், ஆமா... யாரைக்கேட்டு பாமககூட கூட்டணி பேசுறீங்க? என்னையவே எகிறி அடிச்
சவங்க அவங்க. விழுப்புரத்துல நாங்க இருக்கோம்... எங்களுக்கே தெரியாம பாமககூட ரகசியமா பேச்சுவார்த்தை நடத்தினா என்ன அர்த்தம்? வன்னியர் தொகுதிகள்லதான் எனக்கு ஆதரவான எம்பி, எம்எல்ஏ-க்கள் இருக்காங்க. பாமகவோட கூட்டணின்னா நாடாளுமன்றத் தேர்தல்ல அவங்க கேக்குற ஆறு தொகுதியும் எனக்கு சாதகமான தொகுதிகளைத்தான் குடுப்பீங்க. அப்படிக் குடுத்துட்டா என்னை நம்பி இருக்கவங்களுக்கு நான் என்ன செய்யுறது?” என்று ஆக்ரோஷப்பட்டாராம் சண்முகம்.

x