பிடித்தவை 10: கவிஞர்  ச.கனியமுது


கரு.முத்து
muthu.k@kamadenu.in


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் பிறந்தவர் ச.கனியமுது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியாகப் பணியாற்றி 2014-ல் பணி நிறைவு செய்தவர். தமிழக அரசின் மூன்றாம் வகுப்பிற்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தை எழுதிய இவர், முன் பருவ மழலையர் கல்வி குறித்து இரண்டு ஆய்வு கட்டுரைகளை எழுதி ஆசிரிய கல்வி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலக்கிய ஆர்வமும், ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழிகளிலும் எழுதும் ஆற்றலும் நிரம்பப்பெற்ற இவர், கவியரங்க மேடைகளில், அரசியல், இலக்கிய கூட்டங்களில் பேசிவருகிறார். கடந்த 28 வருடங்களாகக் கதை, கவிதைகளை எழுதி வரும் கனியமுது ஒரு காலத்தில், ‘சிந்தனைச் சிறகுகள்’ எனும் சிற்றிதழையும் நடத்தியவர். அவருக்குப் பிடித்தவை பத்து இங்கே...

மனிதர்கள்: பெண் தன்மை கொண்ட ஆண்களும் ஆண் தன்மை கொண்ட பெண்களும். அவர்கள் மிகவும் ஈர்ப்பானவர்கள்.
படித்ததில் பிடித்தது: ‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்...’ என்ற ஆண்டாளின் பாடல் வரிகள்.

சிறுகதைகள்: வைக்கம் முஹம்மது எழுதிய ‘ஆகாய மிட்டாய்’, ‘அழியாச்சுடர்கள்’ ஓ.ஹென்றி எழுதிய ‘மாப்பசான் சிறுகதைகள்’ மிகவும் பிடிக்கும்.

புத்தகங்கள்: ‘வால்காவிலிருந்து கங்கைவரை’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘காதுகள்’, ‘அபிதா’, ‘சிந்தாநதி’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ உள்ளிட்டவை.

இடங்கள்: வட தஞ்சை, காவேரிப்பட்டினம், ஒகேனக்கல், அதியமான் கோட்டை தகடூர், சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் பீச் .

பொழுதுபோக்கு: புத்தகங்கள், சினிமாக்கள் குறித்து முகநூலில் எழுதுவது விவாதிப்பது. குழந்தைகளுடன் விளையாடுதல், பாடல்களை எழுதி பாடுவதும் கேட்பதும் பிடிக்கும்.

தலைவர்கள்: கலைஞர் கருணாநிதி, இந்திராகாந்தி, ஃபிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா ,ஆபிரகாம் லிங்கன் .

திரைப்படங்கள்: Pretty Woman, Maid of Manhattan, தமிழில் ‘காற்றின் மொழி’

மேற்கோள்: ‘ BORN TO WIN’

ஆசான்கள்: என் பெற்றோர் மற்றும் அரிஸ்டாட்டில். 

x