களைப்பறியா பணி: மின் ஊழியர்களை வாழ்த்தி வணங்கும் மக்கள்!


கரு.முத்து
muthu.k@kamadenu.in


ரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னமும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது டெல்டா. கஜா நிகழ்த்திவிட்டுப் போயிருக்கும் கொடூர தாண்ட வத்தின் பாதிப்பிலிருந்து மக்களை முழுமையாக மீட்டெடுக்க முடியாமல் அரசாங்கமும் தத்தளிக்கிறது. இதனால், அரசின் மீதான ஆதங்கக் குரல்கள் இன்னமும் அடங்கியபாடில்லை. ஆனால், அரசுக்கு எதிரான அதிருப்திகள் பல இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சொல்லிவைத்தாற் போல் மின்வாரிய ஊழியர்களின் களைப்பறியா சேவையை மக்கள் மாலை போட்டுக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் மறியல், முற்றுகை எனத் தங்களது எதிர்ப்பைக்காட்டும் மக்கள், களத்தில் நிற்கும் மின் பணியாளர்களிடம் அப்படி எந்தக் கோபத்தையும் காட்டுவதில்லை. மாறாக, அவர்களோடு தோளோடு தோள் நின்று புனரமைப்புப் பணிகளில் கைகொடுக்கிறார்கள். தங்களுக்கு வரும் உணவுகளை அவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். சில இடங்களில், மின் ஊழியர்களுக்குப் பொதுவில் சமைத்துக் கொடுத்தும், அவ்வப்போது தேநீர், இளநீர் எனத் தங்களால் இயன்றதைத் தந்து உபசரித்தும் வருகிறார்கள் மக்கள்.

x