பேசிக்கிட்டாங்க...


நாகர்கோவில்
பீச் ரோடு பகுதியில் ஒரு டீக்கடையில் இருவர்...
``என்ன மாப்ளே...இன்னிக்கி வீட்டுல ஒரே சண்டையா இருந்துச்சு என்ன பிரச்சினை..?''
``அடுத்தவன் வீட்டுல நடக்குறத தெரிஞ்சுக்
கறதுல அம்புட்டுக் குறியா இருக்கிறீயே...''
``இல்ல மாப்ள... அக்கா ‘டாம்' டூம்னு குதிச்சதுனாலே.... ஒரு அனுதாபத்துல கேக்குறேன்''
``அது, ஒண்ணும் இல்ல மச்சி... பக்கத்து தெருவுல நில வேம்பு கசாயம் கொடுத்தாங்க... அதை ‘குவாட்டர்' பாட்டில்ல வாங்கிட்டு போனேன். அதை சரக்குன்னு நெனச்சு உங்க அக்கா என்னைய ரவுண்டு கட்டி பின்னிட்டா''
- பனங்கொட்டான் விளை,  மகேஷ் அப்பாசுவாமி

சேலம்
புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து எடப்பாடி செல்லும் தனியார் பேருந்தில்...
``ஜீ... காக்காபாளையம் நிற்கும்ங்களா..?''
``நிற்கும் ஏறுங்க...''
``அந்த ஸ்டாப்பிங்குக்கு கொஞ்சம் முன்னாடி இறங்கணும்... அப்படியே வண்டியை ஸ்லோ பண்ணினா இறங்கிக்குவேன்.''
(இன்னொரு பயணி இடையில் புகுந்து)
``வெளங்கிடும். இப்பவே வண்டி ஸ்லோவாதான் போயிட்டிருக்கு. இவரு வேற ரிக்கொஸ்ட்டு! பேசாம இங்கயே இறங்கிக்குங்க..!''
- இடைப்பாடி, ஜெ.மாணிக்கவாசகம்

x