அல்சரால் அவதியா?


இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘அரிது அரிது அந்நிய உணவுகளை உண்ணாதோர் அரிது! அரிது அரிது இரைப்பை அல்சர் இல்லாதோர் அரிது!’ எனக் குறுங்கவிதை எழுதும் அளவுக்கு நாட்டில் அல்சர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றனர். வயதானவர்களுக்குத்தான் அல்சர் வரும் என்று சொல்லிவந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது பத்து வயதிலேயே அல்சர் வந்துவிடுகிறது. 40 வயதில் இது ஆவேசம் காட்டுகிறது.

எது அல்சர்?

இரைப்பையிலும் சிறுகுடலின் முன்பகுதியிலும் புண் ஏற்படுவதை ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம். சிறுகுடலின் மற்ற பகுதிகளிலும் பெருங்குடலிலும்கூட அல்சர் வரலாம். அதற்கு வேறு பெயர்கள்; வேறு காரணங்கள்!

இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது; பெப்சின் என்சைம் உண்டாகிறது. இந்த இரண்டும் அளவுக்கு மேல் சுரந்தால் இரைப்பை மற்றும் முன்சிறுகுடலில் தற்காப்பு சவ்வு சிதைந்து புண்ணாகிறது. இதுதான் பெப்டிக் அல்சர்.

x