நெஞ்சில் எரிச்சல் ஏன்?


டாக்டர் கு. கணேசன்

பத்தாம் வகுப்பு படிக்கும் பிரதாப் அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று என்னிடம் சிகிச்சைக்கு வருவான். ‘பாடங்களைப் படிப்பதற்குச் சிரமப்படுவதால் இப்படிச் சொல்லித் தப்பிக்கிறான்’ என்று அவன் வீட்டில் சந்தேகப்பட்டனர். அவனுடைய ஆரம்பப் பரிசோதனையிலும் நோய் எதுவும் தெரியவில்லை. கடைசியில் வயிற்றை எண்டோஸ்கோப்பி எடுத்துப் பார்த்தபோதுதான் அவனுடைய பிரச்சினை புரிந்தது. பொதுவாக, 40 வயதுக்கு மேல் வரக்கூடிய நெஞ்செரிச்சல் (Heartburn) பிரச்சினை பிரதாப்புக்கு 15 வயதிலேயே வந்துவிட்டது. விளக்கமாக விசாரித்ததில் அவன் தினமும் சாப்பிடும் சிப்ஸ்தான் அதற்குக் காரணம் எனத் தெரிந்தது. அவன் உணவுமுறையை மாற்றிக்கொண்டதும் நெஞ்செரிச்சல் காணாமல் போனது.

இன்றைய நவீன வாழ்க்கையில் பிறந்த குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் முதியோர் வரை அனைவருக்கும் உணவுமுறை மாறிவிட்டது. அதனால் விளையும் தொற்றா நோய்க் கூட்டத்தில் நெஞ்செரிச்சலும் சேர்ந்துகொண்டது. ‘சாதாரணத் தொந்தரவுதானே!’ என்று இதை அலட்சியப்படுத்தவும் முடியாது. காரணம், அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நாட்பட்டு நீடித்தால், அது புற்றுநோயில் கொண்டுபோய் விடக்கூடிய ஆபத்து உள்ளது.

எதுக்களிப்பு நோய்!

x