குழந்தை இல்லா குறை


டாக்டர் கு. கணேசன்

பெண்ணுக்கு என்ன குறை?

ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லாத தன்மையில் இரு வகை உண்டு. முற்றிலுமாக, குழந்தை பிறக்காமலேயே போய்விடுவது (Primary sterility) ஒரு வகை. கரு கலைந்தோ, ஒரு குழந்தை பிறந்த பிறகோ குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது (Secondary sterility) அடுத்த வகை. இந்த இரண்டில் முதலாம் வகையைச் சரிசெய்வதுதான் மருத்துவர்களுக்குப் பெரிய சவால்.

ஆணுக்கு விரைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பெண்ணுக்குச் சூலகங்களும் (Ovaries) இருக்க வேண்டும். பெண்ணின் இடுப்புப் பகுதியில் கருப்பைக்கு வலது, இடது பக்கங்களில் கருக்குழாயின் (Fallopian tube) இரு முனைகளிலும் பலாக்கொட்டை போன்று தொங்கிக்கொண்டிருக்கின்றன இரண்டு சூலகங்கள். இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் 30 சினைமுட்டைகள் உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு சூலகத்திலிருந்தும் மாதம் ஒரு முறையாக மாறி மாறி சினைமுட்டைகள் முதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள ஈர்ப்புக்குழாய்களுக்குச் (Fimbriae) செல்கின்றன. ஆனாலும், ஒரே ஒரு சினைமுட்டை மட்டுமே கருக்குழாய்க்குள் நுழைய முடிகிறது.
குழந்தை உருவாகும் அதிசயம்!

x