டாக்டர் கு. கணேசன்
ஆபீஸ் ஸ்ட்ரெஸ்! அலுவல் அழுத்தம்! இயந்திர கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்வியலில் அடிக்கடி பேசப்படும் வார்த்தைகள் இவை. நாட்டில் மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்த பிறகு, ஓய்வில்லாத உழைப்பு இன்றைய தலைமுறைக்குத் தேவைப்படுகிறது. விடுப்பு கிடைக்காத அளவுக்கு வேலைப்பளு, குறுகிய காலத்தில் அதிக டார்கெட் அடைய ஓடுவது, திறமைக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காதது, உறக்கமில்லாத இரவுகள்… இப்படிப் பல காரணங்களால் ‘அலுவல் அழுத்தம்’ இவர்களை ஆட்டிப் படைக்கிறது. அத்தோடு, பணிச்சூழலும் குடும்பச்சூழலும் சரியாக அமையாத பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த அழுத்தங்களால் ரத்த அழுத்தம் உயர்வதிலிருந்து குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுவது வரை பல்வேறு பிரச்சினைகள் முளைப்பது அநேகருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே அழுத்தங்கள் ஆண்களுக்கு உயிரணுக்களையும் அழிக்கும் என்பதுதான் பலருக்கும் தெரியவில்லை. உயிரணுக்களின் உற்பத்தி நிலையங்கள் விரைகள் என்றால், அவற்றுக்கான மூலப்பொருட்கள் செம்மையாகச் செயல்படும் ஹார்மோன்கள். செடியின் வேரில் கொதிக்கும் நீரைக் கொட்டினால் என்ன ஆகுமோ அதுபோலத்தான் மன அழுத்தம் ஹார்மோன் சுரப்பையே சிதைத்துவிடுகிறது. இதுதான் அவர்களை அப்பா ஆகவிடாமல் தடுக்கிறது.
இளமையில் நீரிழிவு - உஷார்!
தற்போதைய புள்ளிவிவரப்படி, இளமையில் நீரிழிவு ஏற்படுவது பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். இடைவிடாத பணிச்சூழலில் இன்றைய ஆண்கள் பலரும் நீரிழிவைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். ரத்த சர்க்கரைக் கூடக்கூட அது உயிரணுக்களின் மரபணுக்களை அழித்துவிடுகிறது. இவர்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது. இது உயிரணு உற்பத்தியைக் குறைக்கிறது. பாலியல் இச்சை குறைந்துபோகிறது. சரியாகக் கவனிக்கப்படாத நீரிழிவு, பாலியல் நரம்புகளைத் தின்றுவிடுவதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இப்படி ஒரு சங்கிலிப் பின்னல் பாதிப்பு அவர்கள் அப்பா ஆவதைத் தடுக்கிறது.
என்னிடம் சிகிச்சைக்கு வந்த குணசேகர் ஒரு நீரிழிவுக்காரர். அவருக்கு உயிரணுக்கள் அளவு சரியாகவே இருந்தது. அவர் மனைவியிடமும் எந்தக் குறையுமில்லை. என்றாலும், அவர் அப்பா ஆவது தள்ளிப்போனது. தொடர்ச்சியான பரிசோதனைகளில் அவருடைய பிரச்சினை எனக்குப் புலப்பட்டது. தாம்பத்தியத்
தின்போது வெளிவரும் ‘உயிர்த் திரவம்’ (Semen) அவருக்குக் குறைவாக இருந்தது.
காரணம், இவருக்கு அது பின்னோக்கிப் பயணித்து சிறுநீர்ப்பைக்குச் சென்றுவிடுகிறது. குணசேகருக்கு மட்டுமல்ல, நீரிழிவுள்ள நிறைய ஆண்களுக்கு இந்த நிலைமை இப்போது ஏற்படுகிறது. மருத்துவர்கள்