​​​​​​​நான் அப்பா ஆவேனா?


டாக்டர் கு. கணேசன்

உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், புற்றுநோய், நீரிழிவு வரிசையில் நவீன வாழ்வியல் கொடுத்திருக்கும் அடுத்த ‘கொடை’, திருமணமான தம்பதிகளுக்குக் ‘குழந்தைப் பேறு இல்லை’ என்னும் குறை. இந்தப் பிரச்சினையை மெத்தப் படித்த தம்பதிகள்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் மருத்துவர்கள் காணும் குறை.

உலகம் முழுவதிலும் சுமார் 8 கோடி தம்பதிகளுக்கு இன்னும் தங்கள் ‘மழலைச் சத்தம்’ கேட்கவில்லை. இதில் இந்தியாவின் பங்கு 2 கோடிப் பேர்! ‘குழந்தை இல்லை’ என்னும் குறைக்கு ஆண், பெண் இருவரிடத்திலும் குறை இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அநேகரும் ‘விதை பழுதில்லை; நிலம்தான் பாழ்’ எனத் தவறாக முடிவெடுத்து, பெண்ணுக்குத்தான் ஏராளமான பரிசோதனைகளை எடுக்கின்றனர். ‘நவீன சிகிச்சை’ என்னும் பெயரில் பெண்ணின் உடலில் விதவிதமாகத் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

சக்கரம் இரண்டும் உருள வேண்டும்!

x