மூட்டுத் தேய்மானம் அறிவது எப்படி?


மூட்டுவலியில் பல தினுசு உண்டு. பாதிக்கப்படும் திசுவுக்கு எது எதிரியாகிறதோ, அதைப் பொறுத்து அதன் பெயர் மாறும். வயதாகி எலும்பு தேய்ந்து உண்டாகும் மூட்டுவலிக்கு ‘ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்’ (Osteoarthritis) என்று பெயர். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது வரும் மூட்டுவலி ‘கவுட் ஆர்த்தரைடிஸ்’ (Gout arthritis). அந்நிய உணவுகளின் ஆதிக்கம் பரவலானதும் நம்மை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்ட மூட்டுவலி இது.

இது எதனால் வருகிறது?

நாம் சாப்பிடும் அதிகப்படியான இறைச்சி அயிட்டங்கள்தான் இந்த நோயை வளர்க்கும் ஆதார உரங்கள். இவற்றிலுள்ள பியூரின் சத்து செரிக்கப்படும்போது யூரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இந்தக் கழிவுப்பொருள் சிறுநீரில் வெளியேறுவது வழக்கம். சமயங்களில், சில நொதிகள் சிதைவதால் இது அதிகமாகச் சுரந்துவிடும். இப்படியும் இருக்கலாம்… சிறுநீரகப் பாதிப்பின்போது சிறுநீரகம் இதை வெளியேற்ற சண்டித்தனம் செய்யும். இதனால், இந்த அமிலம் ரத்தத்தில் தேங்கும். இது கொஞ்ச நாள் உடலுக்குள் ஊர்வலம் போகும். ஒரு கட்டத்தில் அது போரடித்துவிடும். நிரந்தரமாக ‘கேம்ப்’ போட இடம் தேடும். இதன் முதன்மை கேம்ப் ஆபீஸ் கால் பெருவிரல்கள். மற்ற மூட்டுகள் இதன் சிறு கிளைகள். இந்த மூட்டுகளில் வீக்கம், அழற்சி, வலி தொடங்கும். காலையில் எழுந்ததும் காலை தரையில் வைக்க முடியாது. வலி கொல்லும்!

தனக்குத்தானே சண்டை!

x