டென்னிஸ் எல்போ -இரா.சாரதி


வணக்கம்.

என் பெயர் ராம்குமார். நான் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர். ஐந்தரை வருஷப் படிப்பை ஐந்தரை வருசத்துக்குள்ளாகவே படிச்சி பாஸ் பண்ணி இப்ப ஒரு வருசமா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். இரண்டு வாரமா எனக்கு திடீர்னு வலது முழங்கை வலிக்க ஆரம்பிச்சது. சரி, இது சாதாரண வலிதான், படுக்கும்போது எசகுபிசகா கையை அழுத்திப் படுத்ததாலே வந்ததுன்னு வெறும் வலி நிவாரண ஜெல் தடவினேன். ஆனா, கேக்கலை.

நைட்ல மட்டும் ஒருவேளை பாரசிடமால் 650 அப்படியே வலி நிவாரண மாத்திரையான அஸ்கிலோஃபெனாக் சாப்பிட்டு பார்த்தேன். ம்க்கும்...சரியாகலை. ஒரு ஆர்த்தோ டாக்டரைப் பார்த்தேன். “இது டென்னிஸ் எல்போ” என்று சொல்லி வலி நிவாரணம் மற்றும் தசை தளர்த்தி மாத்திரைகளை இரு வேளைக்கு எனப் பத்து நாட்களுக்குப் பரிந்துரைத்தார். கூடவே எக்ஸ்ரேவும் எடுக்கச் சொன்னார். எடுத்தேன். பார்த்துவிட்டு, “எலும்பில் ஒன்றுமில்லை; பிசியோதெரபி எடுத்துக்கலாம்”னு சொன்னார். அதுவும் செய்துகிட்டேன்.

பிசியோதெரபி சென்டர் ஒரு மூலையிலே, என் க்ளினிக் வேறு மூலையிலே. பிசியோதெரபிஸ்ட் அல்ட்ராசானிக் மசாஜ் கொடுத்து ஒரு எல்போ பேண்ட் எனப்படும் முழங்கை மேல் போடுற பெல்ட் ஒன்றை மாட்டிக்கச் சொன்னார். போட்டுக்கிட்டேன். அதுவும் ஒரு அளவுக்கு நிவாரணம் தந்ததே தவிர முழுமையான நிவாரணம் இல்லை.

x