“பிறந்த நாள் பரிசு தாருங்கள்..!”


செப்டம்பர் 16-ம் தேதி ப.சிதம்பரம் பிறந்த நாள் அதையொட்டி சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிவேல்ராஜன் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முகநூல் பக்கத்தில் சிதம்பரத்துக்கு மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதிப் பதிவிட்டிருந்தார். ‘பிறந்த நாள் பரிசு தாருங்கள்’ என்ற தலைப்பில் தொடங்கும் அந்தக் கடிதம் சிதம்பரத்தை தமிழக காங்கிரஸின் தலைமை ஏற்க வேண்டுகிறது.

அதன் சுருக்கம் இதுதான். ‘காங்கிரஸ் தலைமை கடந்த மாதம் தங்களைக் கேட்டதாகவும் தாங்கள், வயதாகிவிட்டதாகச் சொல்லி வேண்டாமென மறுத்ததாகவும் கேள்விப்பட்டோம். யாருக்கு வயதாகிவிட்டது? 1984-ல் துடிப்புடனும் துள்ளலுடனும் இருந்த உங்களுக்கு இப்போது அசாத்திய துணிவும் கூடியிருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் துக்ளக் சாலை தயாராகவே இருக்கிறது. அக்பர் ரோடு ஆனந்தமாகிவிடும். தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க தமிழகத்திலிருந்து கதர் வேட்டி கட்டிய தமிழர்கள் 40 பேர் நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். ஒரு முடிவெடுங்கள்... தமிழ்ச் சமுதாயம் தங்களை காலம் உள்ளவரை வாழ்த்தும்... அதனையும் கடந்து காங்கிரஸ் தொண்டன் பூரிப்படைவான். அன்புத் தலைவர் ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தியடையும். கதர்ச்சட்டைகளுக்கும் காலர் உண்டு, அதனைத் தூக்கிவிட்டுக் கொள்ள ஒரு வாய்ப்புத் தாருங்கள் இந்தப் பிறந்த நாளில் எங்களுக்குப் பரிசு தாருங்கள் ஜெய்ஹிந்த்!’ என்று முடிகிறது அந்தக் கடிதம். கட்சியின் முகநூல் பக்கத்தில் மட்டுமில்லாது காங்கிரஸ்காரர்களின் வாட்ஸ் - அப் குழுக்களிலும் இப்போது இந்தக் கடிதம் அதிரடியாய் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இவர்களை நம்பித்தான்...

நாகர்கோவிலில் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 22-ம் தேதி நடத்தநாள் குறித்தார்கள். இந்த விழாவுக்காக இதற்குமுன் தேதி குறித்தபோதெல்லாம் அதிமுக எம்பி-யான விஜயகுமார்தான் இங்கு மாவட்டச் செயலாளராக இருந்தார்.
ஆனால், சமீபத்தில் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விஜயகுமாரின் செயலாளர் பதவியையும் பறித்துவிட்டார்கள். இதனால், அப்செட்டில் இருக்கும் அவர்,

x