மெட்ராசு- மதுரை ஒ. முருகன்


“இந்திராகாந்திய சுட்டுக்கொன்னுட்டாங்களாம்!”

இந்த சேதிய காதுல கேட்ட பின்னியப்பனுக்கு நெஞ்சுக்குள்ள பதபதப்பு தொத்திக்கிச்சு.
மனசு அங்கிட்டும் இங்கிட்டும் அலைபாஞ்சி, தானா பொலம்ப ஆரம்பிச்சிட்டான்.
சிவீர்ன்னு செவந்து தோட்டம் பூராம் பழுத்துக் கெடக்கு தக்காளி.

நாட்டுத் தாக்காளிக்கு அடிக்கடி சீக்கடிக்குதின்டு, அக்ரி ஆபீசர்ட்ட ஓசனை கேக்க, ஆபீசரு கொடுத்த தக்காளி வெதய, மேட்டுப் பாத்தியில பக்குவமா பாவி, வெதமெதந்துறக் கூடாதுண்டு, அடுப்புச் சாம்பலத் தூவி, தண்ணிகட்டி, வெய்யிலோட தாக்கம் வெதை முளப்ப கெடுத்திறக் கூடாதுண்டு, தென்னங்கீத்தால மூடிவச்சுப் பாதுகாத்துவெச்சான். அதுனால அம்புட்டு வெதையும் பழுதில்லாம மொளைச்சுத் தோட்டம் அடைக்க தளதளன்னு வளந்து நின்னுருச்சு.

போன வருஷம் மதுர மார்க்கட்டுக்கு ஏத்திவிட்ட தக்காளி, நல்ல வெலை கெடைக்காம, புடுங்குன கூலிக்குக்கூட கட்டாம, ரோட்டுல கொட்டிட்டு வந்த வயித்தெரிச்ச இன்னும் தீரல.

x