அதுக்காகத்தான் அசால்ட் காட்டுறாங்களோ..!


கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக கோவையில் சினிமா கலைஞர்கள் கலந்துகொண்ட ‘மறக்க முடியுமா கலைஞரை’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், அரசியல் களத்துக்கு வந்து வளர்ந்து கொண்டிருக்கும் ரஜினியும், கமலும் பங்கேற்கவில்லை. ”கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு அப்பீலுக்குப் போயிருந்தால் நானே போராடியிருப்பேன் என்று சொன்ன எங்கள் தலைவரை திமுக முறைப்படி இந்த அஞ்சலி கூட்டத்துக்கு அழைக்கவில்லை” என அங்கலாய்க்கும் கோவை சூப்பர் ஸ்டார் படை, “தலைவர் தளபதியை விட்டுட்டு அழகிரியைத் தூக்கிப் பிடிக்கிறார்னு அசால்ட் காட்றாங்களோ...” என்றும் கொளுத்திப் போடுகிறது. உண்மையில், ரஜினிக்கும் கமலுக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முறையாக அழைப்பு அனுப்பியதாம் திமுக. தவிர்க்க இயலாத காரணத்தால் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று அவர்களும் பதில் கொடுத்து விட்டார்களாம். கருணாநிதி கதை வசனத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்காக விஜயகாந்துக்கு மரியாதை நிமித்தமாக அழைப்பிதழ்கூட அனுப்பவில்லையாம் திமுக. எல்லாம் கடந்த தேர்தலில் கற்ற பாடம்!

என்னைய உங்க தம்பியா நெனச்சுக்குங்க..!

பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பூவை .செழியன். ஓபிஎஸ்-ஸின் தீவிர விசுவாசியான இவர் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட கட்சியில் இப்போதே அப்ளிகேஷன் போட்டுக்கொண்டிருக்கிறார். தலையோட நிலையே தள்ளாட்டத்தில் இருப்பது தெரியாமல், “அண்ணன் ஓபிஎஸ் எப்படியும் நம்மளுக்கு சீட் வாங்கித் தந்துருவார்” என்று தனது விசுவாசிகளிடம் செழிப்பாகப் பேசிவரும் செழியன், தொகுதியில் உள்ள முக்கியப் பத்திரிகை
யாளர்களை எல்லாம் தொடர்புகொண்டு, “என்னைய உங்க தம்பியா நெனச்சுக்குங்க... இதுக்கு முந்தி நான் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் ஏதாச்சும் தப்புக் கிப்புப் பண்ணிருந்தாலும், உங்கள ஏதாச்சும் கூடக் கொறையப் பேசியிருந்தாலும் அதையெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. கட்சியில சீட் கேட்டிருக்கேன். வாய்ப்புக் கெடச்சா தம்பிய கைதூக்கி விடுங்க” என்றும் டச்சிங்காக பேசிவருகிறாராம்!

பணம் என்னடா பணம் பணம்..!

x