ந.வினோத் குமார்
டெல்லி. 23 ஜூன் 1975!
பகதூர் ஷா சஃபர் மார்க் சாலை. இந்தியாவின் மிக முக்கியமான, முன்னணி தேசிய நாளிதழ்களுக்கு எல்லாம் இங்குதான் அலுவலகங்கள் இயங்குகின்றன. அதில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழும் ஒன்று!
அங்கே, ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு அன்றைய தினம் வந்திருந்த வாசகர் கடிதங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார் பத்திரிகையின் எடிட்டர் குல்தீப் நய்யர். அப்போது அவர் கேபின் முன் நிழலாடியது. லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் அவர்.