வழுக்கையால் வருத்தமா?


ஒரு தலைமுடிக்கு ஆயுட்காலம் முடிந்தவுடன் அது தானாகவே உதிர்ந்துவிடும். ஓய்வுக் காலம் முடிந்த முடிகள் மறுபடியும் வளரத் தொடங்கும். இப்படிப் பழைய முடிகள் உதிர்வதும், புதிய முடிகள் வளர்வதும் எண்ணிக்கையில் சமமாக இருக்கும்வரை பிரச்சினை இல்லை. மாறாக, உதிரும் முடி அதிகமாகவும், வளரும் முடி குறைவாகவும் இருந்தால் ‘கவுளி’ கத்துவதாக அர்த்தம்.

இன்றைய இளம் வயதினருக்கு ‘ஆபீஸ் ஸ்ட்ரெஸ்’ காரணத்தால் முடி உதிர்வது அதிகரிக்கிறது என்று ஏற்கெனவே பார்த்தோம். அதேவேளையில், கொத்துக்கொத்தாக முடி கொட்டுகிற இளைஞர்கள் அதைப் பற்றியே சிந்தித்து, தீர்க்க முடியாத காஷ்மீர் பிரச்சினைபோல் கவலைப்படுவதால் அவர்களுக்கு முடி உதிர்வதைத் தடுப்பதும் தாமதமாகிறது.

முடிப் பிரச்சினைக்காக ஒரு கல்லூரி மாணவியை என்னிடம் அழைத்து வந்திருந்தார் பெண் வார்டன். “டாக்டர்! போன வாரம் மட்டும் இவளுக்குக் கொட்டின முடி இது!” என்று ஒரு கைப்பையைக் காட்டினார். குளிக்கையில், படுக்கையில், சீப்பில், பிரஷ்களில் என எங்கெல்லாம் முடி கொட்டியதோ எல்லாவற்றையும் அதில் சேகரித்து வைத்திருந்தார். முடிகளால் நிரம்பி வழிந்த அந்தப் பையைப் பார்த்ததும் நானே அதிர்ந்துபோனேன். அதை அனுதினமும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மாணவியின் மனம் என்ன பாடுபடும்? அந்தக் கவலை ஒன்றே போதும்! மறுபடி மறுபடி முடி உதிரும்!

நடுவீட்டு நாட்டாமை!

x