கரைந்துபோன காதல் பிறை-  எஸ்.லஷ்மிகாந்தன்


ஒரு ஜாவா பைக்கோடுதான் முதன்முதலில் அவளுடனான அறிமுகம் தொடங்கியது. எப்பொழுதும் மொக்கையாகவே பேசிக்கொண்டிருக்கும் நண்பன் சண்முகசுந்தரத்தின் ஜாவா பைக்தான் அந்த காலத்திய கண் கவர் பைக். அதன் டப...டப... எனும் டபுள் சைலன்சரின் சப்தமும், அழகான பெட்ரோல் டேங்க்கும், சற்றே குறைந்த, கைகளை கீழ்நோக்கி அழுந்தவைக்கும் ஹேண்டில் பாரும் இன்றைக்கு அவுட் ஆஃப் பேஷனாகிவிட்ட ஹெட்லைட்டும் எவரையும் அசத்திக் கவரும். பத்மாவையும்தான்!

நம்ம பைக்காக இருந்தால்தான் கொஞ்சம் கவலை தேவைப்படும். சண்முகத்தினுடையதுதானே... ஸ்டன்ட் காட்ட வசதியாய் இருந்தது. நான் இருந்த
ராகவன் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்த சீதா அபார்ட்மென்ட்டில், இல்லை இல்லை... சீதா காலனியில் தான் பத்மா இருந்தாள். என் அப்பா தன் சின்ன வயதில் வைத்திருந்த ஸ்வேகா, லூனா வண்டிகளைக் கடந்து நான் ஒரு பழைய ஒடிசலான டிவிஎஸ் வண்டியைத்தான் வைத்திருந்தேன். அந்த வண்டியை அடுத்த ஏரியாவான அழகாபுரத்தில் இருந்த சண்முகத்திடம் கொடுத்துவிட்டு, அவனுடைய ஜாவாவை எடுத்துக்கொண்டு சும்மா சுற்றும்போது கண்ணில்பட்ட பத்மாவிடம் மையல் கொள்ள, அவள் பைக்கின் மீது மையல்கொண்டாள்.

ராகவன் தெருவும் சீதா காலனியும் பொருத்தமாய் இருப்பதாய் தோன்ற, அந்தக் காலத்தில் அப்படித்தான் தோன்றும். நான் அவளுக்காகவே கால்களை ஊன்றாமலும் வெயிட்டால் தடுமாறா மலும், பைக் ஓட்ட கற்றுக்கொண்டதும் அந்தக் காலத்தில்தான்!

“ஏங்க,, என்னங்க ஏதோ யோசனையாவே இருக்கீங்க...” குரல் கேட்டு சிலிர்த்தேன்.

x