பண்டிட்ஜீயின் படம் எங்கே? - மாற்றுக் கட்சியினரையும் மதித்த வாஜ்பாய்!


காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் ஒன்றின் ஆட்சிக் காலத்தை முதன்முறையாகப் பூர்த்தி செய்த பிரதமர் என்ற பெருமைக்குரியவர் வாஜ்பாய். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடங்கி அதன் அரசியல் அவதாரமான பாரதீய ஜனசங்கம், பாரதீய ஜனசங்கத்தின் அடுத்த கட்ட அவதாரமான பாஜக, அதன் தலைமையிலான அரசின் பிரதமர் என்று வாஜ்பாயியின் அரசியல் பயணம் மிகவும் நெடியது.

1924, டிசம்பர் 25-ம் தேதி மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பிறந்த வாஜ்பாயியின் பூர்வீகம் உத்தர பிரதேசம். அவரின் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர்; வாஜ்பாயைப் போலவே கவிஞரும்கூட. குவாலியர் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் கான்பூர் டி.ஏ.வி. கல்லூரியில் முதுகலைப் படிப்பையும் முடித்த வாஜ்பாய்க்கு இந்துத்துவம் சார்ந்த அரசியல் பிடிப்பு இளம் வயதிலேயே ஏற்பட்டது. ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவில் இணைந்து 1944-ல் அதன் பொதுச்செயலாளராக ஆனார். ஆர்எஸ்எஸ் உடனான உறவு 1939-லிலேயே தொடங்கினாலும் 1947-ல்தான் அதன் முழுநேரப் பிரச்சாரகர் ஆனார்.

இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, தான் படித்து வந்த சட்டப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு முழுநேர இந்துத்துவ அரசியலில் இறங்கினார். ஜனசங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் வலதுகரமாகச் சில ஆண்டுகள் இருந்த வாஜ்பாய், முகர்ஜியின் மறைவுக்குப் பிறகு ஜனசங்கத்தின் முக்கியமான தலைவராக உருவெடுத்தார். 1957-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனசங்கத்தின் சார்பில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட வாஜ்பாய் பல்ராம்பூரில் மட்டும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதிலிருந்து பத்துமுறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்வுசெய்யப்பட்ட வாஜ்பாய், ஒரே ஒரு தேர்தலில் மட்டும்தான் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

நாடாளுமன்றக் களத்தில்…

x