சட்டி உடைஞ்சிடாம பாத்துக்கோங்க..!
தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஆளும்கட்சிக்காரர்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாநகரங்களில், முன்பு பகுதி வாரியாகத்தான் செயல்வீரர் கூட்டங்களைப் போடுவார்கள். கோவையில் தொகுதி வாரியாக அதிமுக செயல்வீரர் கூட்டங்களை நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபி-க்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டங்களில் தொண்டர்களைப் பேசவிட்டு அவர்களின் குமுறல்களையும் குறைகளையும் (அதிசயமாய்!) காதுகொடுத்துக் கேட்கிறார்கள்.
சமீபத்தில் போத்தனூர் சுந்தராபுரம் செயல்வீரர்கள் கூட்டத்தில், “சட்டி இருந்தாத்தான் சமைக்கலாம். அப்புறம்தான் எடுத்து சாப்பிடலாம். சட்டி உடைஞ்சுட்டா எதுவுமே செய்ய முடியாது. அதனால சட்டி உடைஞ்சிடாம, அதாவது கட்சி உடையாம காப்பாத்துங்க!” என்று கெஞ்சாத குறையாகப் பேசினார் பொள்ளாச்சி ஜெயராமன். எதற்காக இந்தத் திடீர் கரிசனம் என்று கேட்டால், “இருக்கிறதுல பாதிப்பேர் தினகரன் அணிக்கும் மீதிப் பேர் ரஜினி பக்கமும் பாஞ்சுட்டாங்க. எஞ்சியிருக்கிறவங்கள தக்க வெச்சுக்கத்தான் இந்தப் போலி கரிசனம்” என்று தொண்டர்களே போட்டுடைக்கிறார்கள்.
சின்னம்மா குடும்பத்து சின்ன எம்.ஜி.ஆர்!