காதல் வந்தால் சொல்லியனுப்பு - வா.மு.கோமு


தேங்காய்த் துண்டைக் கடித்துக்கொண்டே, “எனக்கு உங்கள ரொம்பப் புடிக்கும்” என்று விஜயா, கணேசனிடம் சொல்லும்போது அவனுக்குள் வெளியே சொல்ல முடியாத பெருமிதம் ஒன்று சேர்ந்துகொண்டது.

அப்போதுதான் விஜயா அந்த மலைக்கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்துவிட்டு வந்திருந்தாள். குரங்குக் கூட்டமொன்று அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த மரத்தின் வாதுகளில் பேன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தன. விஜயாவும் கணேசனும் குரங்குகளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

கணேசன் தன்னுடைய கூந்தலை பேன் சீப்பு ஒன்றில் சீவி, அதில் வரும் பேன்களை வலதுகை பெருவிரலால் நசுக்கிக் கொல்வதாக ஒருகணம் நினைத்துச் சிரித்துக்கொண்டாள். அவனும் சும்மாவுக்காக ஒருமுறை சிரித்தான்.

கணேசனுக்கு வயது முப்பத்தி இரண்டாக ஆறு மாதம்தான் இருக்கிறது. இரட்டைப்படையில் அது போய் அமர்ந்துவிட்டால், பிறகு அவனுக்கு மம்பட்டிக் கல்யாணம்தான் என்று பார்த்த ஜோதிடர்கள் எல்லாருமே அவன் அம்மாவிடம் சொல்லிவிட்டார்களாம்.

x