மனசு வெளுக்காதவர்கள் – ஹரணி


“நல்லாப் பூட்டிட்டு வாங்க. நாம திரும்பி வர்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆவும்” என்றாள் சாரதா.

“சரி. நல்லாத்தான் பூட்டியிருக்கேன்” என்றபடி அவள் சொன்னதற்காக ஒருமுறை பூட்டை இழுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான் சுகுமாறன்.

“சாவிய என்கிட்ட கொடுங்க.. எங்காச்சும் வச்சிட்டு தேடுறதே உங்க பொழப்பாப்போச்சு.”

எதுவும் பேசாமல் கொடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். சாரதா ஏறி உட்கார்ந்ததும் புறப்பட்டான்.

x