மனித உறுப்பு மார்க்கெட் ஆகிறதா தமிழகம்? -ஆள் பிடிக்க அலையும் மாஃபியாக்கள்..!


அறிதல், அஞ்சுதல்... ஆய்ந்து தெளிதற்கே!

டி.எல்.சஞ்சீவிகுமார்
sanjeevikumar.tl@kamadenu.in

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நமக்கெல்லாம் தெரிந்த ஒரு முக்கியப் புள்ளிக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எளிதில் கிடைக்காத உறுப்பு அது. பார்த்தார்கள்... லாரியை வைத்து அடித்து ஆளைத் தூக்கினார்கள். விபத்து சித்தரிக்கப்பட்டது. உறுப்பு கத்தரிக்கப்பட்டது. பின்னணியில் பல லட்சங்கள் கைமாறியது தனிக்கதை. ஊரறிந்த ரகசியம் இது. ஆனால், ஊரறியாத ரகசியங்கள் ஏராளம். கசாப்பு கடைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதயம் தொடங்கி நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், சதை, ரத்தம், தோல், முடி என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை. விலை கொடுத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அடித்துப் பிடுங்குபவர்களும் இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இயங்குபவர்களே உடல் உறுப்பு மாஃபியாக்கள்!

x