கற்பனைத் தேரில் அற்புதப் பயணம்
ரோகிணி
readers@kamadenu.in
மகனுக்கான பெண் பார்க்கும் படலத்தில் ஓரிரு வருடத்தில் இதுவரை நூறு ஜாதகங்களாவது கணிக்கப்பட்டிருக்கும். இரண்டில் ராகு, எட்டில் கேது. அதற்கேற்ற வரன் வேண்டும். போதாக் குறைக்கு தார தோஷம், களத்திர தோஷமென ஏகப்பட்ட கண்றாவிகளை அடுக்கிய ஜோதிடர்களின் தொடர் உரை கேட்டுப் பாதி ஜோதிடம் கற்றுக்கொள்ள தள்ளப்பட்ட நேரம், அந்த ஜாதகம் வந்தது. இல்லையில்லை, அந்த ஜாதகியே லைனில் வந்தாள்.
“மேட்ரிமோனியலில் பார்த்தோம். எங்க அம்மா வுக்கு உங்க மகனைப் பிடிச்சிருக்கு. ஜாதகமும் பார்த்துட்டோம். ஒங்க மகன்கிட்ட பேசினாங்க. அவரு அப்பாகிட்ட பேசுன்னுட்டார்!” தொலை பேசியில் படபடத்த குரல்.