வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடக் கூடாது!


சரவணன்

தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு வருடத்தில் காணாமல் போன செய்தி கடந்த வாரம் வெளிவந்து அதிர்ச்சி அளித்தது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளும் தொழில் கூட்டமைப்பினரும் அரசை விமர்சித்தனர்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பது முதலீடுதான். பல நிறுவனங்கள் மூடப்படுவதற்குக் காரணம் போதிய நிதி இல்லாததுதான். அரசு, முறையான கடன் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வெளிநாடு களிலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கான ஏற்பாடு களைச் செய்யவும் அரசு முன்வந்துள்ளது. கடந்த வாரம் சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் இதுகுறித்த பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். “சிறு, குறு நிறுவனங்கள் அந்நிய முதலீடு களை ஈர்க்க உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் முகமை ஒன்று அமைக்கப்படும். இந்த முகமையின் மூலம் நிறுவனங்கள் அந்நிய முதலீட்டாளர்களுடனும் வர்த்தக அமைப்புகளுடனும் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படும். தொழில் முனைவில் புதிய யோசனைகளைப் புகுத்துவதை ஊக்குவிப்பதற்கான அரசின் கொள்கை விரைவில் வெளியிடப்படும், சிறு, குறு தொழில் துறையில் ஆராய்ச்சிகளுக்கு மானியம் வழங்கப் படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

x