அரசியல் நொறுக் எனில்... அப்படியே சாப்பிடலாம்!
பளிச்சென வந்தாரே..!
கடந்த 12-ம் தேதி சட்டமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, வழக்கம் போல பளிச்சென சிரித்த முகத்துடன் வந்தார். ஆனால், திரும்பும்போது முகம் சிவந்துபோய் திரும்பினார். சட்டமன்றத்தில் சபாநாயகர் தன்னைப் பேச அனுமதிக்காததை எதிர்த்துக் குரல் கொடுத்தார் விஜயதரணி. இதை அனுமதிக்காத சபாநாயகர், அவரை சபையைவிட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை அதிரடியாகத் தூக்கிக்கொண்டுவந்து வெளியில் விட்டார்கள் சபையின் பெண் காவலர்கள். இந்தப் போராட்டத்தில் விஜயதரணிக்குக் கையிலும் முகத்திலும் அழுத்தம் பட்டு கலங்கிப் போனார். சபைக்கு வெளியே நின்ற மீடியா மக்களிடம் இதைச் சொல்லி கையையும் முகத்தையும் காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடமும் தனக்கு நேர்ந்ததை விவரித்தவர், “சபையில் சபாநாயகர் நடத்தும் விதம் சரியில்லை... நீங்கதான் தட்டிக் கேட்கணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
படங்கள்: எல்.சீனிவாசன்