சொற்கடல் கடைய... சுரக்கும் அமுதம்!
நன்றி
வணக்கம்!
இமய மலை. பூம்பள்ளத்தாக்கு. எட்டு மணிநேர மலையேற்றம். ஏற ஏற உயிர்வளி குறைய, ஏற ஏற உடல் வலி பெருக, கால்கள் களைக்க ஆனாலும் தொடங்கியதை முடிக்க வேண்டும் என்ற வெறி முன்னே அழைக்க, ஏறி முடித்து அந்தப் பள்ளத்தாக்கின் அழகில் கண்களும், பூங்காற்றில் சுவாசமும் புதிதாகும் தருணங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன. சிறிதோ, பெரிதோ ஒவ்வொரு பணியும் ஒரு பனிமலை. தொடங்கும்போது அச்சம். முடிக்கும்போது உச்சம்.