ஏணிகள் எப்படி?- அகிலன் கண்ணன்


முகநூலில் இவனுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. நண்பர் வேண்டுதலில் இவனது பால்ய வயதுத் தோழி வைதேகி காத்திருக்கிறாள்!

புகைப்படத்தில் அடையாளம் காணக் கிட்டவில்லை. இரட்டை ஜடையுள் அடங்காது முன் விழும் சுருள் முடியும், உருட்டி நோக்கும் விழிகளுமாக இவன் மனக்கண் முன் அந்த நாள் வைதேகி வந்தாள். எதிர் வீடு. சிறிய தெரு. மொத்தம் இருபது வீடுகளே. அக்கம்பக்கம் ஒவ்வொரு வீட்டு நபர்களும் தெரு முழுக்க ஒவ்வொருவருக்கும் அத்துப்படி - எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். இன்றுபோல் நகரத்தின் புழுதியும் தூசியும் வேஷமும் படியாத பளிங்கு நாட்கள் அவை. மாறாத மாநகரமாகத்தான் இருந்தது அன்றைய சென்னை. மனிதர்களும் அப்படியே. எதிர் வீட்டு ரமேஷும் வைதேகியும் இவனுக்கும் இவனது அக்கா வேணிக்கும் நெருக்கம். வெவ்வேறு பள்ளிகளாயினும் படிப்பு தவிர்த்து விளையாட்டு, பண்டிகை எனக் கூடிக் களித்த பசுமை நிறைந்த இனிமையான பால்யகால நாட்கள் அவை.

இவன் இப்போதுதான் இந்தக் கணினித் தேவதையுடன் பழக ஆரம்பித்துள்ளான். ஆறு மாதமாகத்தான் கடிதம் அனுப்ப - பெற எனக் கணினியுடன் மெல்லுறவு கொள்ள ஆரம்பித்தவன், பத்துப் பதினைந்து நாட்களாகவே முகநூல் போதைக்கு அடிமையாகியுள்ளான். அலுவலகப் பணி முடிந்து, வீடு வந்தவுடன் சின்னத்திரையிலிருந்து விடுபட்டு இக்கணினி வலையுள் இவன்...

இன்று காலை நாளிதழில் படித்த செய்தி இவனை ஈர்த்தது; இப்படிப் பதிந்தான் தனது முகநூலில்:

x