ரத்தசோகை அறிகுறிகள் அறிவோம்!


மக்கள், மருத்துவ ஆலோசனைகளுக்குக் குடும்ப மருத்துவரை அணுகிய காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் சாதாரண தலைவலியிலிருந்து, மோசமான மாரடைப்பு வரைக்கும் முதலில் யோசனை கேட்பது ‘கூகுள் டாக்டரை’த்தான். குடும்ப டாக்டரைத் தெய்வமாகக் கும்பிட்ட தலைமுறை மறைந்து, ‘கூகுள் தேடலை’த் தெய்வமாகக் கும்பிடத் தயாராகிவிட்டது இன்றைய தலைமுறை. இதுவும் ஒரு ‘லைஃப் ஸ்டைல்’ மாற்றம்தான்.

வங்கி அதிகாரி சீனு பெருமையாகச் சொல்லிக்கொள்வார்… “அஞ்சு வருஷமா ஆஸ்பத்திரிப் பக்கம் தலைவச்சிப் படுத்ததில்லை… எல்லாம், கூகுள் குரோம் புண்ணியம்!”

அந்த சீனுவுக்குப் புதிதாக ஒரு பிரச்சினை. தினமும் சாயங்காலம் உடல் சோர்வாகிவிடுகிறது. காரணம் அறிய, கூகுளில் தேடினார். முக்கால்வாசி தேடல்கள் ‘ரத்தசோகை’யை முன்னிலைப்படுத்தின. ஒரு தனியார் ‘லேபி’ல் தன்னுடைய ரத்தத்தைப் பரிசோதித்துக்கொண்டார். ஹீமோகுளோபின் குறைவாக இருந்தது. ‘ரத்தசோகை’ உறுதியானது. அடுத்து என்ன செய்வது? மறுபடியும் ‘கூகுள் தேடலில்’ புகுந்தார். இரும்புச் சத்து மாத்திரை/ டானிக் சாப்பிட்டால் சரியாகிவிடும் எனப் பதில்கள் குவிந்தன. சீனுவுக்கு வயிற்றில் அல்சர் உண்டு. அதனால், அவர் மாத்திரை சாப்பிடாமல் டானிக்கை மட்டும் குடித்தார்.

மாதங்கள் பல கடந்தும் சீனுவுக்குச் சோர்வு விடவில்லை; ஹீமோகுளோபின் கூடவில்லை. சென்ற வாரம் அலுவலகத்தில் கழிப்பறைக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. மறுநாளே அவருடைய சோர்வும் மறைந்துவிட்டது. இதென்ன மாயம்?

x