தேங்காய் ரம்- இரா.முருகன்


முன்பனிக்கால சனிக்கிழமை சுகமான வெய்யிலோடு விடிந்தது. நடு ராத்திரிக்கு அப்புறம் தூங்கியது போதுமானதாக இல்லை என்று உடம்பு புகார் செய்தது.

நேற்று தாகசாந்தி கொஞ்சம் அதிகம். அருணன் வருவதாக உறுதியளித்து, கடைசி நேரத்தில் ஃபோன் செய்து வருவதற்கில்லை என்று சொல்லிவிட்டான். அவனுக்காக வாங்கி வைத்த தேங்காய் ரம் என்ற வினோதமான திரவத்தை முழுக்க அருந்த நான் மட்டும்தான் இருந்தேன். அப்புறம்தான் கஸ்டமர் நாதமுனி வந்து சேர்ந்துகொண்டான்.

தெருவோடு போனவன் நாதமுனி. வெள்ளிக் கிழமை சாயந்திரம் லுங்கி உடுத்திக்கொண்டு சமயாசமயத்தில் அதையும் மடித்துக் கட்டிக் கொண்டு, இங்கிலாந்து யார்க்ஷையர் பிரதேச கால்டர்டேல் நகரத்தில் லாந்திக்கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதி மகிழ்ச்சி. எப்போதாவது வெள்ளைக்காரன் யாராவது கேலியாக சிரித்தபடி எதிர்பட்டுப் போவான்.

“சாயந்திரம் ரூம்லே லைட் எரியுதேன்னு வந்தேன். இதென்ன தனியா உகார்ந்து குடிச்சுட்டிருக்கே?” அவன் கேட்டபடி உள்ளே வந்தபோது உட்காரச் சொல்லி தேங்காய் ரம் விளம்பினேன்.

x