ரத்த சோகை தெரியுமா?- டாக்டர் கு. கணேசன்


உலக அளவில் இந்தியா ஆறாவது பணக்கார நாடு. இதை நினைத்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. பண வளமும் மனித வளமும் மிகுந்துள்ள இந்த நாட்டில்தான், ஊட்டச்சத்துக் குறைபாடுகளும், அவை கொடுக்கின்ற நோய்களும் அலை அலையாய் வந்து ஆர்ப்பரிக்கின்றன.

சென்ற ஆண்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட தேசியக் குடும்ப நல ஆய்வு அறிக்கையை வாசித்தவர்களுக்கு இரண்டு விஷயங்கள் புரிந்திருக்கும். அதிக வருமானம் உள்ளவர்களில் 20% பேருக்கு உடற்பருமன் வந்து பெரும் சிக்கல்களைத் தருகிறது. குறைந்த வருமானம் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாமல், ரத்தசோகை ஏற்பட்டு, பல ஆபத்துகளைச் சந்திக்கின்றனர். இந்தப் பாதிப்புகள் தனிநபரோடு முடிந்துபோவதில்லை; நாட்டில் மனித வளத்தைப் பயன்படுத்துவதிலும் பெரிய தேக்கத்தை இவை ஏற்படுத்துகின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, தொற்றும் நோய்களை நவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியாலும் தடுப்பூசிகளின் பயனாலும் ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால், அதே அறிவியல் வளர்ச்சி நம் உணவுச் சந்தைக்குள் புகுந்து பல தொற்றாநோய்களை உரம் போட்டு வளர்க்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். அதிலும் குறிப்பாக, ஆண்களைவிடப் பெண்களிடம் மிகுந்து காணப்படும் பல நோய்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கே சவால் விடுக்கின்றன என்றால், மாறிவரும் உணவுப் பண்பாடு நம் ஆரோக்கியத்தை எவ்வளவு தூரம் வஞ்சிக்கிறது என்பதை யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ரத்தசோகை!

x