வசநதம் ‘கால்’  பண்ணுமா?- ஏங்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்..!


அப்போதெல்லாம் நான்கு பல்ஸ்களுக்கு (வினாடிகள்) ஒரு எஸ்டிடி கால் முடிந்து, மீட்டர் எகிறும். ஆனாலும், பூத் வாசல்களில் வரிசை கட்டி நிற்பார்கள் மக்கள். சரி, கடைசியாக நாம் எப்போது டெலிபோன் பூத்தைப் பயன்படுத்தினோம்?

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே போன் இணைப்பே இல்லாத வெற்று பொதுத் தொலைபேசி நிலையத்தில், பார்வையற்ற ஒருவர் வெறித்தபடி இருப்பதைப் பார்த்தபோது எழுந்த கேள்வி இது. கூடவே, இப்போது பொதுத் தொலைபேசி நிலையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா? அதை நடத்திய பார்வையற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றறியும் ஆர்வமும் ஏற்பட்டது.

மதுரையில் பார்வையற்றோர் நடத்தும் பிசிஓக்கள் அதிகம் இருப்பது பெரியார் பேருந்து நிலையத்தில். மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் அமர்ந்தபடி, அங்கிருந்த பிசிஓவுக்கு யாரெல்லாம் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தேன். பிளாட்ஃபாரத்தில் பழக்கடை வைத்திருக்கும் ஒரு அம்மா, தன் குடும்பத்தில் யாருக்கோ போன் செய்து பேசினார். அவரிடம் கைபேசி இல்லை போலும். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டே, யாருக்கோ அழைத்தார். ரிங் போக ஆரம்பித்ததும் கட் பண்ணிவிட்டு, நகர்ந்தார்.

அடுத்த நிமிடமே அவரது செல்போனுக்கு கால் வந்தது. “பேலன்ஸ் இல்ல... அதாம் பூத்ல இருந்து மிஸ்டு கால் கொடுத்தேன்” என்று தன் புத்திசாலித்தனத்தை மறுமுனைக்குச் சொல்லியபடியே நகர்ந்தார். மாலை நேரங்களில் இளைஞர்கள் கால் பண்ண வருகிறார்கள். ஒரு வேளை அவர்களது ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் இறங்கி ‘ஸ்விட்ச் ஆஃப்’ ஆகியிருக்குமோ?

x