பக்கவாதம் எதிர்கொள்வது எப்படி?


‘நேரம் பொன்னானது; கடமை கண்ணானது!’ எனச் சும்மா சொல்லவில்லை நம் முன்னோர்கள். காரணத்தோடுதான் சொல்லியிருக்கிறார்கள். நாம்தான் பல நேரங்களில் அதை அலட்சியப்படுத்தி அல்லல் படுகிறோம். இதற்கு உதாரணம் ஆறுமுகம்.

ஆறுமுகம் 60 வயதைக் கடந்த ஓர் ஏழை விவசாயி. ஒருமுறை இவர், நிலத்தில் விதைத்துக்கொண்டிருந்தபோது லேசாக மயக்கம் வந்து கண்ணை மறைத்துள்ளது. அதற்கு வெயில் காரணமாக இருக்கும் என்று அவராகவே சமாதானப்படுத்திக்கொள்கிறார். அடுத்தமுறை வாந்தி எடுத்துத் தலைச்சுற்றித் தரையில் விழுகிறார். அதைப் பார்த்த அவர் மனைவி ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்கிறார். அப்போதுதான் முதல்முறையாக அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படுகிறது. அது 170/110 என்று காட்டுகிறது. அதற்கு சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்.

அதேநேரம் ‘அவர் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது’ என்று அங்கே சொல்லப்பட்ட ஆலோசனையைக் காதில்போட்டுக்கொள்ளாமல், தொடர்ந்து விவசாய வேலைகளில் ஈடுபட, சில மாதங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, வழியிலேயே மயங்கி விழுகிறார். அப்போது, பக்கவாத தீ அவரைப் பற்றிக்கொள்கிறது. அது சிறு பொறியாகத் தன்னைக் காட்டியபோது அலட்சியப்படுத்தியதன் விளைவு இது. நேரத்தோடு அதைத் தடுக்க முயலாமல் இப்போது அவதிப்படுகிறார். இம்மாதிரியான ஆறுமுகங்கள் ஆயிரக்கணக்கில் நம்மிடையே நடமாடுகிறார்கள்.

பொன்னான நேரம் முக்கியம்!

x