கேரள அரசை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்


பிரதமருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்

கூடலூர்: கேரள அரசைக் கண்டித்து லோயர்கேம்ப்பில் ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதும் போராட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர்கேம்ப்பில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதும் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் தலைமை வகித்தார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்தி முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை குறித்த வதந்தியை கேரளா நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஐந்து மாவட்டங்களிலும் தலா 1 லட்சம் கையெழுத்து வாங்க தீர்மானிக்கப்பட்டது.

x