ரத்தக்கொதிப்பு சந்தேகங்கள்!- நீங்கள் கேட்டவை!


ரத்தக்கொதிப்பு கட்டுரையைப் படித்துவிட்டு, ‘காமதேனு’ வாசகர்கள் பலர் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுள்ளனர். அவற்றில் எல்லோருக்கும் பயன்படும் முக்கியமான சிலவற்றை இந்த வாரம் பார்த்துவிடுவோம்.

எனக்கு சில சமயங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. பல சமயங்களில் அது சரியான அளவிலும் இருக்கிறது. நான் ரத்தக்கொதிப்புக்கு மாத்திரை சாப்பிட வேண்டுமா?

உடலில் ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே அளவாக இருக்காது; மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ குறைந்தோ காணப்படும்.

உதாரணமாக, இது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும். இது தற்காலிக மாற்றமேயாகும். உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல்முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும்போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

x