லத்தியின்றி, ரத்தமின்றி ஒரு சாதனை !


திண்டுக்கல் மாவட்டத்தில், முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.

தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் மரணங்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிடக் கடந்த ஆண்டு குறைந்திருக்கின்றன. போக்குவரத்துத் தொடர்பான பல்வேறு துறைகளின் கூட்டு உழைப்பும் கடுமையான நடவடிக்கைகளுமே இதற்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.

ஏப்ரல் 23 முதல் 29 வரை சாலை பாதுகாப்பு வாரம் தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டது.  திண்டுக்கல்லில் இதற்கான நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்த  ஆட்சியர் டி.ஜி.வினய், தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து மரணங்களும் விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருப்பதை விளக்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை 497. கடந்த ஆண்டின் சாலை விபத்து மரணங்கள் 635. அதேபோல் இரு சக்கர வாகன விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 172ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 95ஆகக் குறைந்துள்ளது. கார் விபத்துகளும் 96-லிருந்து 71 ஆகக் குறைந்துள்ளன. காரால் மோதிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்ற வழக்குகள் 71-லிருந்து 25 ஆகக் குறைந்துள்ளது. அரசுப் பேருந்துகளால் நிகழ்ந்த விபத்துகள் 41- லிருந்து 39 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 41 அரசுப் பேருந்து விபத்துகள் பதிவாகின. அதேநேரத்தில் முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு 7 தனியார் பேருந்து விபத்துகள்,  5 ஆட்டோ விபத்துகள், 13 லாரி விபத்துகள் அதிகம்.

x