ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு..!


பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறை அதிகாரிகள் திருச்சி சரக சிறைகளைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். காரணம், அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள். இங்கு பல ஆண்டுகளாகக் கைதிகள் சிலருக்கு அளிக்கப்பட்ட ‘சிறப்பு’ கவனிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கைதிகளுக்கு அரசு அனுமதித்திருக்கும் அளவிலான உணவுகள் சரியாக அளிக்கப்படுகின்றன. சோதனைகளும் கடுமை. இத்தனைக்கும் காரணமாக, திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக பதவியேற்றிருக்கும் சண்முகசுந்தரத்தைக் கைகாட்டுகிறார்கள். சிறைத்துறை காவலர்கள், அதிகாரிகள் ஆகியோரும் தங்கள் குறைகளைச் சொல்லும் வகையில் வாட்ஸ் அப் குழுவையும் உருவாக்கியுள்ளார் சண்முகசுந்தரம். அக்குழுவின் பெயர் ‘ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு!’.

பிழை செய்தாரா பிழை திருத்துநர்?

நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது உள்பட மொழிபெயர்ப்பு எழுத்தாக்கப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் குளச்சல்.மு.யூசுப். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சார்பில் நாலடியாரை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. பணிகளை முடித்த யூசுப் சரிபார்க்க, பிழைதிருத்த மலையாள எழுத்தாளர் முண்டியாடி தாமோதரனுக்கு நூலை அனுப்பினார். அப்படி அனுப்பியதை தாமோதரன் தனது பெயரில் வெளியிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறார் யூசுப். இது தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 6 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பின்னும் முடிவு எட்டப்படவில்லை. தற்போது நாகர்கோவில் ஜே.எம் - 2 நீதிமன்றத்தில், தனிநபர் வழக்குத் தொடுத்துள்ளார் யூசூப். இந்த வழக்கில், தானே வாதாடுகிறார் யூசுப்!

கோயிலில் நல்லொழுக்கப் பயிற்சி!

x