நெல்லை - திருச்செந்தூர் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார், குறிச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி இசக்கி ராஜேஸ்வரி.
ஓடும் ரயிலிலேயே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அந்த ரயிலில் தினமும் பயணிக்கும் செவிலியர்கள் ஐரின், ரஸ்மித் ஆகியோரும் மற்ற பெண் பயணிகள் சிலரும் சேர்ந்து இசக்கிக்குப் பிரசவம் பார்த்து குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுக்க உதவினர். நாசரேத்துக்கு ரயில் சென்றபின் அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸில் தாயும், சேயும் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்படியான உள்ளங்கள்தான், பக்கத்தில் ஒரு மனிதன் இருந்தால் உதவி நிச்சயம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.