நீதிமன்ற ஆணையை மதிக்காத அதிகாரிகள்!


தமிழக அரசு ஊழியர்களுக்கெதிராக 30,840 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று வேதனைப்பட்டிருக்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன். தமிழகத்தில் 2000-லிருந்து இதுவரை 30,840 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2007-ல், தமிழக அரசு ஊழியர்கள் மீது 807 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதியப்பட்டன. 2016-ல், இந்த எண்ணிக்கை 3,132 ஆக உயர்ந்தது.

“இந்த அவமதிப்பு வழக்குகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றாமல் இருப்பதற்கு விளக்கமும் அளிப்பதில்லை, உத்தரவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வதும் இல்லை” என்று சாடியுள்ளார் நீதிபதி.

‘விநாயகா மிஷன்ஸ்’ என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் படித்த ஆறு பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு செல்லாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் பி.எட் பட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் பி.எட் பட்டத்துக்கு நிகரானதாக இல்லை என்று அதற்குக் காரணம் கூறியிருந்தது. இதை எதிர்த்து அங்கு படித்து தகுதித் தேர்வு எழுதிய ஆறு பேரும் வழக்குத் தொடர்ந்தனர்.

x