ஜனவரியில் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாக, அதில் கொஞ்சம் குறைக்கப்பட்டது. கட்டண உயர்வுக்குப் பின் நாளொன்றுக்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.1 கோடி அதிக வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ரூ.30 லட்சம் வரை மட்டுமே அதிகரித்திருக்கிறது. கட்டண அதிகரிப்புக்குப் பிறகு மாநகரப் பேருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30% அளவு குறைந்திருப்பதே இதற்குக் காரணம். குறிப்பாக அதிகக் கட்டணம் வசூலித்து, பெயரில் மட்டும் சொகுசாக இருக்கும் பேருந்துகளை மக்கள் வெகுவாகத் தவிர்க்கத் தொடங்கிவிட்டனர்!
நெல்லை, மதுரையில் உபரி பட்ஜெட்!
பற்றாக்குறை பட்ஜெட் என்ற வார்த்தையைப் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருநெல்வேலி மாநகராட்சி அதன் 24 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக உபரி பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. வருகிற நிதியாண்டில் நெல்லை மாநகராட்சி மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களுக்கான ஒட்டுமொத்த செலவு ரூ,709.20 கோடி என்றும் மாநகராட்சிக்கு ரூ.714.5 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.5.32 கோடி உபரித் தொகை மாநகராட்சியிடம் மிஞ்சும் என்கிறார்கள். இதேபோல மதுரை மாநகராட்சியிலும் ரூ.1.92 கோடிக்கு உபரி பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது!
சீமானை அழைக்காத வைகோ!