‘காதைத் தொறந்து வெச்சாலே எல்லாம் கெடைச்சுடும்!’ - கண்மணி குணசேகரன்


அரசுப் போக்குவரத்துக் கழக விருத்தாசலம் பணிமனையின் பாதுகாவலர் அறை... காக்கி முழுக்கால் சட்டையும், நீலநிற மேல்சட்டையும் அணிந்து வருபவர்,

‘’வாங்கண்ண! செத்த உக்காருங்க, ஷிப்ட்டு முடிஞ்சு இப்பதான் வர்றேன். ட்ரெஸ் மாத்திக்கிட்டு வந்திடறேன்” என்று என்னை அமரவைத்து விட்டுப் போகிறார். அந்தப் பணிமனையில் பழுதுநீக்கும் ஊழியர் அவர். நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் போல்ட், கிரீஸ், ஆயிலே  கதியாகக் கிடக்கும் அவருக்குள்தான் பழைய தென்ஆற்காடு மாவட்டத்தின் வட்டார மொழிக் கலாசாரத்தைத் தொகுத்த கவிஞர், எழுத்தாளர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.

கரிசல் சொற்களை கி.ராஜநாராயணனும், கொங்கு வட்டாரச் சொற்களை பெருமாள்முருகனும், நெல்லை வட்டாரச் சொற்களை அ.கா.பெருமாளும் சேகரித்து தொகுத்தது போல, திருக்கோயிலூர் தொடங்கி கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை வரை மக்களிடையே புழக்கத்தில் உள்ள  வட்டாரச் சொற்களை

நடுநாட்டு சொல்லகராதியாக தொகுத்தவர் கண்மணி குணசேகரன்.

x