புற்றுநோய் பரிசோதனைகள்: ஏன், எதற்கு, எப்படி?


கெட்டுப்போனச் சுற்றுச்சூழலால் சென்னையிலும் பெங்களூருவிலும் இளம் வயதிலேயே புற்றுநோய் தாக்குவது அதிகரித்துள்ளது என எச்சரிக்கிறது, இந்திய அரசின் புற்றுநோய்த் துறை. அசுத்தமான குடிநீரும் கழிவுகளும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள் என்று அது தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதிலும் நாளொன்றுக்கு சுமார் 2,000 பேருக்குப் புதிதாக புற்றுநோய் ஏற்படுகிறது; தினமும் சுமார் 1,500 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். இந்த நிலைமை நீடித்தால், 2020-ல் ஏறத்தாழ 20 லட்சம் பேருக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அது எச்சரித்துள்ளது.

இத்தனைக்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னாலேயே பல புற்றுநோய்களைத் தடுத்துவிட முடியும் என்று சத்தியம் செய்கிறது இன்றைய நவீன மருத்துவம். நாற்பது வயதுக்கு மேல், ஆண்டுக்கு ஒருமுறை ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ செய்துகொண்டால், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுகொள்வது சாத்தியம் என்கிறது களப்பணி நிலவரம்.

புற்றுநோய் ஸ்கிரீனிங்!

x