உத்தராகண்ட் ஆன்லைன் மோசடி கும்பலால் எண்ணூர் கூலி தொழிலாளி வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட ரூ.32 லட்சம்


சென்னை: எண்ணூரில் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.32லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரதுவங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை எண்ணூரை சேர்ந்தவர் மதியழகன். கூலித் தொழிலாளியான இவர் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் எண்ணூர் கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில், மதியழகன் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கட்டணம் செலுத்த பணம்எடுக்க வங்கிக்கு நேற்று சென்றார். தனது வங்கிக் கணக்கில் இருந்துரூ.40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அப்போது, அவரதுசேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் கேட்ட மதியழகன் அதிர்ச்சி அடைந்தார்.

அதுகுறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பல் ஒன்று ரூ.32 லட்சத்தை வேறொரு வங்கிக் கணக்குக்கு அனுப்புவதற்காக பதிலாக, தவறுதலாக மதியழகனுடைய கணக்குக்கு அனுப்பியதால், அவரதுசேமிப்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

பணத்தை எடுக்க முடியவில்லை: இதனால், மதியழகன் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவர் வங்கி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று ரூ.32 லட்சத்தை வேறொரு கணக்குக்கு அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக மதியழகன் வங்கிக் கணக்குக்கு அனுப்பிஉள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரித்து வரும் உத்தரகண்ட் மாநில சைபர் கிரைம் போலீஸார் மதியழகனின் வங்கிக் கணக்கை முடக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து, நாங்கள் அவருடைய வங்கிக் கணக்கை முடக்கி உள்ளோம். விசாரணை முடிந்ததும் மதியழகன் வங்கிக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்’’ என்று தெரிவித்தனர்.

x