ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். எந்தத் தவறைச் செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக்கொள்ள மாட்டான்.
அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் சாட்சிகளும் இது நாள்வரை இல்லை.
அதனால் ஊரில் பெரிய மனிதனாக வலம்வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கொள்ளைக்காரக் கும்பலும் இருந்தது.
'இவ்வளவு தைரியமாக உலவிவருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?' என்று எல்லோரும் கேட்பார்கள்.