சுகந்தமான கருவாடு!


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மூன்று மணி நேரப் பயணத்தில் இருக்கிறது பங்கூர் தீவு. சுமார் 20 கி.மீ. சுற்றளவு இருக்கும். அவ்வளவுதான். தீவின் முக்கியமான தொழில் என்ன தெரியுமா? கருவாட்டு வியாபாரம்!

நம்மூரைப் போல அல்ல; கருவாடு வியாபாரத்தின் வழியாகக் கோடிகளில் புரளுகிறார்கள் இங்குள்ள மீனவர்கள். அமெரிக்கா, சீனா, சுவீடன் என்று உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளுக்கும் அன்றாடம் கப்பல்களிலும் சரக்கு விமானங்களிலும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்கிறார்கள். விசேஷம் என்னவென்றால், எஞ்சிய மீன்களைக் காயவைத்து, கருவாடாக்கி அனுப்பும் வழக்கமான தொழிலாக இங்கே கருவாட்டு வியாபாரம் இல்லை. மாறாக, மீன்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே பக்குவப்படுத்தி, கச்சிதமாக வெட்டி சின்னச் சின்ன பெட்டிகளில் அடைத்து விற்கிறார்கள்.

தீவுக்குள் ‘பாக் சூ’, ‘ஹை செங் பிஷ் பேக்டரி’ என்று தீவுக்குள் கருவாட்டுத் ஆலைகள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இரவு, பகலாக தரமான மீன்களை வெட்டி, பதப்படுத்தி நவீன இயந்திரங்களில் காய வைக்கிறார்கள். சில பல வழிமுறைகளுக்குப் பிறகு அந்த மீன் துண்டங்கள் மற்றும் இறால்கள் தரமான கருவாடாக உருமாற்றப்படுகின்றன. திரும்பிய திசையெல்லாம் மீன் வாடை மட்டுமே வீசினாலும் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் கொஞ்சமும் குறைவில்லை. இன்னொரு விசேஷம் என்னவென்றால், இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள்!

“இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்தத் தீவுக்கு பிழைப்பு தேடி வந்தேன். வெறும் மீன் பிடியோடு நிறுத்திக்காம அதை மதிப்புக்கூட்டி விற்கிற கலையை அப்பவே இந்தத் தீவோட மக்கள் தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. பொதுவாக இந்தியாவுல மீதமான, விற்பனையாகாத மீன்களையே கருவாட்டுக்காகப் பயன்படுத்துவாங்க.

x