ஒரு மணி நேரத்தில் சென்னை டு சேலம்


மார்ச் 25 முதல்.சென்னையிலிருந்து சேலத்துக்கு ஒரு மணி நேரத்தில் விமானத்தில் சென்றுவிடலாம். 72 பேரைச் சுமந்து செல்லக் கூடிய இந்த விமானம், தினமும் இயக்கப்படவிருக்கிறது. இதில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.1500. 1993-ல் அமைக்கப்பட்ட சேலம் விமான நிலையத்தில் சில ஆண்டுகள் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன.

2012-ம்ஆண்டோடு கிங் ஃபிஷர் நிறுவனம் இயக்கிய சென்னை-சேலம் விமானம் நிறுத்தப்பட்டது. இப்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (ஏஏஐ) திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை நீட்டிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை-சேலம் விமானம் இயக்கப்பட இருக்கிறது.

x