ஒன்னய போலீஸ் தேடுச்சே!
என்னா விவரம்?”
சக்கரத்தை ‘சல்ல்’ எனச் சுழற்றிவிட்டு கோட்டம் பார்த்துக்கொண்டே அய்யப்பனிடம் கேட்டார் ஃப்ராங்க்ளின் அண்ணன்.
சைக்கிள் கடையின் இடது ஓரத்தில் போடப்பட்டிருந்த அல்லது நானே எனக்குத் தோதாகப் போட்டுக்கொண்ட டயர்களால் ஆன நாற்காலியில் அமர்ந்து மும்முரமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.